மனம் விட்டு பேசுங்கள்

Created by Tolanguage In Articles 1 July 2021

வணக்கம் பெற்றோர்களே, இந்த காலகட்டத்தில் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் இடையே உள்ள உரையாடல்கள் மிகவும் குறைந்த வண்ணம் உள்ளன. பெற்றோர்கள் அலுவலகப் பணிக்காக சென்று  விடுகின்றனர், குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் வேளையில் அன்றாடம் என்ன நடந்தது என்பதை சிறிது நேரம் அமர்ந்து பெற்றோர்களிடம் மனம் விட்டு பேசினால் அன்றைய நாள் குழந்தைகளுக்கு இனிதாக அமையும் என்று எண்ணுவார்கள். ஆகையினால் பெற்றோர்களே உங்களுடைய மதிப்பான சில மணி நேரத்தை உங்களின் பிள்ளைகளுக்காக ஒதுக்கி அவர்களிடம் அமர்ந்து உரையாடுங்கள் அவர்களின் மனதில் என்ன உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள் அவர்கள் உங்களிடம் உரையாடும் பொழுது மிகவும் சந்தோஷமாக இருப்பார்கள் அதனை கண்டு நீங்களும் மகிழலாம்.பெற்றோர்களின் மனசோர்வும் நீங்கி பிள்ளைகளும் மகிழ்வார்கள். பெற்றோர்களின் குழந்தை பருவத்தை பிள்ளைகளிடம் பகிரும் பொழுது பழைய நினைவுகள் தோன்றும் பொழுது மனது புத்துணர்ச்சியுடன் திகழும். குழந்தைகளும் பெற்றோர்களின் குழந்தை பருவம் எப்படி இருந்தது என்பதை தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். பெற்றோர்களும் பிள்ளைகளும் மனம் விட்டு பேசிய பிறகு பாருங்கள் உங்களின் மனசோர்வு உங்களுக்கு  இருக்காது. பிள்ளைகளும் மகிழ்வாக இருப்பார்கள் இருவரும் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். மனம் விட்டு பேசுங்கள்.

Comments (0)